Advertisement

Main Ad

ஹக்கீமை நீதியமைச்சராக நியமித்தமை சுத்த பைத்தியகாரத்தனம்!

BBSsமுஸ்லிம் வர்த்தக சமூகத்தில் இருந்து இந்த நாட்டின் 90 வீத சிங்கள மக்களைத் தள்ளி வைக்க நாம் நினைத்தால் அதனைச் செய்து காட்டுவோம்.

பௌத்த  அமைப்பான பொது பல சேனா எச்சரித்திருக்கிறது.
அந்த அமைப்பின் முன்னணி பிக்குவான வண. கலகொடத்தே ஞானசார தேரர் இவ்விடயம் குறித்து கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை நீதியமைச்சராக ஜனாதிபதி நியமித்தமை சுத்த பைத்தியகாரத்தனம். என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் விசேட அதிகாரங்களைக் கொண்ட அரசியல் சக்தி ஒன்றினாலேயே பொது பல சேனா உருவாக்கப்பட்டது என்றும், அந்த சக்தி எது என்று பெயரிட்டு வெளிப்படுத்தத் தாம் விரும்பவில்லை என்றும், நாட்டில் இப்போது உரிமை மீறல் தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதற்கு இலங்கையில் உள்ள சில மதத் தீவிரவாத அமைப்புகளே காரணம் என்றும் அமைச்சர் ஹக்கீம் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
அந்த விடயம் குறித்துத் தமது கருத்தை வெளியிட்டபோதே வண.ஞானசார தேரர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்.
அமைச்சர் ஹக்கீம் புறமொதுக்கப்பட்ட மனிதர் என்றும், அவர் மேலும் செயற்பட அனுமதிப்பதில்லை என்பதில் தாங்கள் உறுதியாக உள்ளனர் என்றும் தேரர் மேலும் கூறினார்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் பொது பல சேனாவே காரணம் என்று அறிக்கை ஒன்றைத் தயாரித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிற்குச் சமர்ப்பித்தமைக்காக அமைச்சர் ஹக்கீம் சிங்கள சமூகத்திடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அவர் கூறினார்.