Advertisement

Main Ad

பாடசாலை கதவினை அடைத்து அன்னூர் தேசிய பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்….

ஓட்டமாவடிஇ அஹமட் இர்ஸாட்



வாழைச்சேனை அன்னூர் தேசிய பாடசாலை மாணவர்கள் அனைவரும் இன்று (2014.09.29 திங்கட்கிழமை) பாடசாலைக்கு முன்னால் உள்ள வீதியில் பிரதான பாடசாலை கதவுகளை மூடிய வன்னம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

அவர்களுக்குறிய பாடசாலையின் கணித, விஞ்ஞான ஆய்வு கூடமும் கட்டிடமும், பறிமுதல் செய்யப்பட்டு அருகாமையில் உள்ள ஆயிஸா பெண்கள் பாடசாலைக்கு செல்லவுள்ளதனால் எதிர்காலத்தில் நீண்ட வரலாற்றினை கொண்ட அன்னூர் பாடசாலையில் கணித, விஞ்ஞான துறைகள் உருவாகிவிட கூடாது என்பதற்காகவே இந்த நாசகார வேலைத்திட்டடம் நடைபெறுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பிதான கோரிக்கையாக காணப்படுகின்றது.

மேலும் அயல் ஊர்களான ஓட்டமாவடி, மீராவோடையில் உள்ள பாடசாலைகளில் விஞ்ஞான கணித துறைகளை வளர்ப்பதற்கான முயற்ச்சிகளும், நடைமுறைகளும் மிகக் கூடுதலாக நடை பெற்றுக் கொண்டிருப்பதாகவும். ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த பாடசாலையானது ஆண்கள்இ பென்கள் என திட்டமிட்டு பிரிக்கப்பட்ட பிற்பாடே பாரிய பின்னடைவை சந்தித்து வருவதாகவும் உணர்சிகரமாக சுட்டிக்காட்டிய மானவர்கள் இது சம்பந்தமான துண்டுபிரசுரம் ஒன்றினையும் வெளியிட்டனர்.

இந்த வீதியில் கலையில் ஏற்பட்ட மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக உடனடியாக பாடசாலைக்கு முன்னால் உள்ள வீதிக்கு விரைந்து வந்த வாழைச்சேனௌ பொலிஸ் உயர் அதிகாரிகள் பாடசாலையின் அதிபர் பிர்தெளஸ் அவர்களுடனும், ஆசிரியர்களுடனும், பொது மக்களுடனும் இது சம்பந்தமான கலந்துறையாடலில் ஈடுபட்டனர். ஆனாலும் வளய கல்விப்பனிப்பாளர் உடனடியாக இதற்குரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என கோறியவர்களாக மாணவர்கள் காணப்படுகின்றனர்.

 அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் பலர்காயமுற்று உயர்தர மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.