சீனாவின் தென்பகுதியில் ஏற்பட்ட நிலஅதிர்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 589ஆக அதிகரித்துள்ளதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.
சீனாவின் யுனான் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலஅதிர்வில் 2,400ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
6.1 ரிக்டர் அளவில் உணரப்பட்ட நிலஅதிர்வில் 9 பேர் காணாமற்போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யுனானில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், சீரற்ற வானிலையால் பணிகளை தொடர முடியாதுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகொப்டர்கள் ஊடாகவும் தரை மார்க்கமாகவும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவில் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலஅதிர்வில் 90,000 பேர் வரையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.