Advertisement

Main Ad

கல்முனையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 175 மாணவர்களுக்கு கௌரவம்!


5

(எம்.வை.அமீர்)

கடந்த 2013 ஆம் ஆண்டு கல்முனை மாநகர எல்லைக்குள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

சமூக அபிவிருத்தி ஐக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.ஐ.எச்.ஜமால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அத்துடன் முஸ்லிம் லிபரல் கட்சியின் தலைவர் எம்.எம்.இஸ்மாயில் கௌரவ அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, மருதம் கலைக்கூடல் மன்றத் தலைவர் அஸ்வான் மௌலானா, தேசிய நீர்வழங்கள் சபை உத்தியோகத்தர் எம்.ஏ.சீ.எம்.பாயிஸ் கரீம், அறிவிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.சாஹீர் கரீம் உள்ளிட்டோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின்போது 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 175 தமிழ், முஸ்லிம் மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கடந்த 2013 கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் தனிப்பட்ட பரீட்சாத்தியாக தோற்றி கல்முனை மாநகர எல்லைக்குள் அதிகூடிய சித்தியைப் பெற்ற எல்.ஜே ஜெஸ்மின் சௌஜா என்ற மாணவியும் விசேடமாக கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன் விசேட தேவையுடைய பத்துப் பேரும் இதன்போது பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

634 1 2