ஆபிரிக்காவில் பரவிவரும் இபோலா வைரஸ் காரணமாக லைபீரியாவில் இருக்கும் இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சுமார் 200 இலங்கைத் தொழிலாளர்களை நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆபிரிக்க கண்ட நாடுகளில் பரவி வரும் இபோலா வைரஸ் காரணமாக அந்த கண்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
ஏற்பட்டுள்ள இந்த நிலைமையால் அங்குள்ள இலங்கையர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் லைபீரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்பி வைப்பதையும் அமைச்சு இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.