இலங்கையின்
அரசியலமைப்பின் படி மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில்
போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சந்தர்ப்பம் இல்லையென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவிக்கின்றார்.
அரசியலமைப்பின் 31 ஆவது சரத்தின் 2ஆவது பிரிவின் படி ஜனாதிபதி மஹிந்த
ராஜபக் ஷ இரண்டாவது பதவிக் காலத்துக்கு 2010 நவம்பர் 19 ஆம் திகதி
பதவியேற்றதால் அவர் மூன்றாவது முறையாக போட்டியிட தகுதியற்றவராகிறார்
என்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் மூலம் 31/2 உபஷரத்து நீக்கப்பட்டுள்ளது.
இதன் படி இதன் பின்னர் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியொருவருக்கு மூன்றாவது
முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அரசியலமைப்பு ரீதியில் தடையேதும்
இல்லை. இருந்தும் இந்த ஷரத்தை நீங்கும் சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷ
மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராகின்றார்.
எனவே சட்டத்தில் தெரிவித்துள்ளபடி அவர் மூன்றாவது முறையாக ஜனாதிபதி
தேர்தலில் போட்டியிட முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.