Advertisement

Main Ad

கினிகத்தேனயில் கார் விபத்து; சிறுமி பலி, அறுவர் காயம் (Video)


கினிகத்தேனயில் கார் விபத்து; சிறுமி பலி, அறுவர் காயம் (Video)ஹட்டன் – கினிகத்ஹேன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
கினிகத்ஹேன – களுகல பகுதியில் இன்று அதிகாலை 1.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காரொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறினர்.
காயமடைந்தவர்கள் தெலிகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
வத்தளையில் இருந்து ஹட்டன் – கொட்டகலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலரே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
அவர்கள் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது