ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தம்புள்ள
பள்ளிவாசல் விவகாரம் சம்பந்தமாக ஆராய அவசரமாக இன்று கூடவிருக்கின்றது.
பொஸ்வானாவில் நடைபெற்ற நீதியமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக
சென்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான
ரவூப் ஹக்கீம் அவசரமாக நாடு திரும்பியுள்ளதை அடுத்து இக்கூட்டம் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் இன்று மாலை 7.00 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கு சகல முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் தம்புள்ள பள்ளிவாசலின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஆராய்ந்து இறுக்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளதுடன் இதனை வைத்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவுள்ளோம்.