Advertisement

Main Ad

சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழக உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி நாளை

சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 3 வது ஆண்டு மர்ஹூம் பௌஸி ஞாபகார்த்த சினேகபூர்வ உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி வரும் (09) வெள்ளிக் கிழமை சாய்ந்தமருது பௌஸி ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் ஆயுட்காலச் செயலாளர் எஸ். முஹம்மட் கானின் வழி நடாத்தலில் இடம் பெறவுள்ளது.
மர்ஹூம் எம்.ஐ. முஹம்மது பௌஸி சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தில் பொதுச் செயலாளர், உதவிச் செயலாளர், பயிற்றுனர், பொருளாளராகவும் பல்வேறு பதவிகளில் இருந்து கழகத்தை வழி நடாத்தியவராகும்.

இவரது ஞாபகார்த்தமாக நடைபெறும் இப்போட்டியில் வாழைச் சேனை அல்- அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் ஏ.வி. பிரிவினருக்கும், சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏ.வி. பிரிவினருக்குமிடையில் நடைபெற உள்ளது.

இப்போட்டி நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும், கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான ஏ.எம். றகீப், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ. பஷீர், எம்.நஸார்தீன், எம்.ஐ.எம். பிர்தௌஸ், ஏ.எம். பரக்கத்துள்ளாஹ் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம்,  அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் எம்.ஐ.எம். மனாப் ஆகியோரும், விசேட அதிதிகளாக விளையாட்டு உத்தியோகத்தர்களான எம்.பி.எம். றஜாய், ஐ. எம். கடாபி மற்றும் விளையாட்டு ஆசிரியர் ரீ.கெ.எம். சிறாஜ் ஆகியோரும் கழக உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.