Advertisement

Main Ad

சென்னையை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி

ஐ.பி.எல். சீசன் 7-ல் கட்டாக்கில்  சென்னைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது. கிங்ஸ்லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.  இதில் முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல் அதிரடியாக 38 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சர்உள்பட 90 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் டேவிட் மில்லர் 47, சேவாக் 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் அதிரடியாக விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் 13 பந்துகளில் பவுண்டரி, 2 சிகசருடன் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனையடுத்து 232 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன்  களமிறங்கிய சென்னை அணியில் யாரும் சோபிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.