Advertisement

Main Ad

ஒட்டுமொத்த பிக்கு சமூகத்திற்கும் இழிவு ஏற்பட்டுள்ளது - பெளத்தசாசன பிரதியமைச்சர்


காவியுடை தரித்த ஒரு சிலரது ஒழுக்க மீறல் செயல்கள் காரணமாக ஒட்டுமொத்த பிக்கு சமூகத்திற்கும் இழிவு ஏற்பட்டிருப்பதைத் தான் ஏற்பதாக பெளத்த சாசன, மத அலுவல்கள் பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன தெரிவித்தார்.

வாய் மூல விடைக்காக புத்திக பதிரண எம். பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,ஒழுக்க மீறல்கள், குற்றவியல் சட்டங்களின் கீழ் தவறு புரிந்த காவியுடை தரித்தவர்கள் தொடர்ந்தும் சாசனத்தில் இருப்பது பெளத்த சாசனத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்பதையும் ஏற்கிறேன். 
இவர்களை சாசனத்தில் இருந்து அகற்றுவதற்கு அந்தந்த பெளத்த மதப் பிரிவுகளின் சங்க சபைக்கோ மகாநாயக்கர்களுக்கோ அதிகாரம் இல்லை என்பதையும் அறிவேன். ஒழுக்க மீறல் தொடர்புடைய காவியுடைதரித்தவர்கள் தொடர்பில் செயலாற்ற சட்டமூலம் தயாரிக்கப்படுகிறது.