Advertisement

Main Ad

Facebook மற்றும் Twitter தளங்களை தடை செய்தால் என் வீட்டில் புரட்சி வெடிக்கும் – ஜனாதிபதி


Facebook மற்றும் Twitter தளங்களை தடை செய்தால் என் வீட்டில் புரட்சி வெடிக்கும் – ஜனாதிபதிFacebook மற்றும் Twitter தளங்களை இலங்கையில் தடை செய்வது தொடர்பில் எந்தவொரு திட்டமும் இல்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் தளத்தினூடாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Q:  Is there any plan to block social websites such as Facebook, Twitter etc in Sri Lanka? (ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களை தடைசெய்வதற்கு எதாவது திட்டமுள்ளதா?)
பதில்: ”என்னுடைய பேஸ்புக் தளத்தை 300,000 பேர் லைக் செய்துள்ளனர், ட்விட்டர் தளத்தில் 25,000 பேர் பின்தொடர்கின்றனர். ஆகவே நான் எவ்வாறு இதனை தடை செய்வது”?
Mahinda-Rajapaksa-tweet-2
”குறித்த தளங்களை நான் தடைசெய்தால் முதலில் என் வீட்டில், என் பிள்ளைகளிடமிருந்தே புரட்சியை சந்திக்க வேண்டி வரும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mahinda-Rajapaksa-tweet