அக்கரைப்பற்றில் நடப்பது அபிவிருத்தியல்ல அது லாபத்திற்காக செய்யப்படுகின்ற செயற்பாடுகளே தவிர மக்களின் தேவைகள் அறிந்து உணர்வுகளோடு செய்யப்படுபவை அல்ல இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பிராந்திய இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது, அக்கரைப்பற்று மாநகர சபையில் இன்று பொம்மை மேயர் ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளார். தந்தையின் நிழலில் தனயன் செயற்படுகின்றார். மக்களுக்காக அந்த மாநகர சபையினால் எதுவுமே நடக்கவில்லை. தனி ஒருவரின் சுயநலத்திற்காக நாங்கள் எங்களை பழி கொடுக்க முடியாது.
அக்கரைப்பற்றில் நாங்கள் 9200 வாக்குகளைப் பெற்று எமது சக்தியை நிருபித்துள்ளோம். நான் வளர்ந்து விடுவேன் என்ற பயத்தினால்தான் என்னை வீழ்த்துவதற்கு சதி செய்தார்கள். இறைவன் நாட்டம் அவர்களின் சதி பலிக்கவில்லை. மக்கள் எங்களோடு இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
