அக்கரைப்பற்று எஸ்.எச். அட்வடைசிங் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அம்பாரை மாவட்ட மூவின மூத்த இசைக் கலைஞர்கள் கௌரவிப்பு விழா ‘பொன் மகுடம்’ அண்மையில் நிறுவனத்தின் முகாமைத்துவப்பணிப்பாளரும், ஊடகவியலாளருமான, எம்.எல்.சரிப்டீன், அறிவிப்பாளரும்,
ஆசிரியருமான எம்.ஐ.அன்வர் தலைமையில் அட்டாளைச்சேனை, தேசிய கல்விக்கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதன்போது 21 இசைக்கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இவற்றில் 17 பாடகர்களும், 04 வாத்தியக் கலைஞர்களும் அடங்குகின்றனர்.
அம்பாரை மாவட்டத்தில் பல வருட இசைத்துறை அனுபவம் பெற்ற சுமார் 30 வயது முதல் 65 வயதுவரையான கலைஞர்களே கௌரவிக்கப்பட்டவர்களாவர். கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் எஸ்.சிவனேசராஜாவின்
(சிவா) சுப்பர் ரியூனர்ஸ் இசைக்குழு மிக சிறப்பாக இசை வழங்க, கௌரவிக்கப்பட்ட பாடகர்கள் தெரிவு செய்யப்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
கல்முனை இசையமைப்பாளர், எஸ்.சிவனேசராஜா, பாடகர் எம்.எம்.கபூர், கிற்றார் வாத்தியக்கலைஞர் நெல்சன் ஜோன், பாடகர் பீ.குலசேகரம் (சேகர்), மருதமுனை பாடகர் எஸ்.எம்.கமால்தீன், சாய்ந்தமருது பாடகர் எம்.எஸ்.மன்சூர் (றபீக்), அக்கரைப்பற்று தபேலா வாத்தியக் கலைஞர் எம்.வை.எம்.இஸ்ஹாக் (சமீம்), இசையமைப்பாளர் எம்.எல்.ஏ.கபூர், அக்கரைப்பற்று பாடகர்களான எஸ்.ஏ.சி.முகம்மட் அஸ்ரப், எம்.பி.சம்சுடீன் (அஸீஸ்), எஸ்.எம்.முகம்மட் றிஸ்வான், எஸ்.பாறூக், கே.தேவராஜா, எஸ்.டிஸ்மத், எம்.ஐ.எம்.இர்பான், ஏ.பி.அனஸ்டீன், கோளாவில் பாடகி எஸ்.சித்ரா, நிந்தவூர் பாடகர் ஏ.எம்.முஸ்தபா, தம்பிலுவில் கே.சண்முகராஜா, இறக்காமம் பாடகர் ஐ.ஹூசைன் றிஸ்வி, அம்பாரை பாடகர் ஏ.எம்.நந்தன அழகியவன்ன ஆகியோர், பிரதம அதிதி தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில் அவர்களினாலும், கௌரவ அதிதி கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் மற்றும் விசேட அதிதிகளாக அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ். இஸ்ஸடீன், செயலாளர் ஐ.எல்.எம்.றிசான், சிரேஷ்ட ஒலிபரப்பாளர், பிறை எப்.எம். சந்தைப்படுத்தல் முகாமையாளர் எஸ்.ரபீக், புரவலர், தொழிலதிபர் ஏ.பி.அப்துல் கையூம், அக்கரைப்பற்று பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.அஹமட் கியாஸ், அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், சட்டத்தரணி எம்.ஐ.உவைசுர் ரஹ்மான், கல்முனை மாவட்ட காணிப்பதிவாளர் முஸத்திக் ஜே முகம்மட் ஆகியோரினால் விருது வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


