
அட்டாளைச்சேனை தைக்கா நகர் பிரதேசத்திலுள்ள பலசரக்குக் கடை ஒன்றில் இன்று
நள்ளிரவு வேளையில் ஏற்பட்ட தீயினால் கடையின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து
சாம்பலாகியுள்ளது.
இத் தீவிபத்து மின்சார ஒழுக்கினால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்கரைப்பற்றுப் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
ஏ.எல்.எம்.நஸீர் தீப்பற்றிய கடையைப் பார்வையிட்டதுடன் கடை உரிமையாளருடனும்,
பொலிஸாரிடமும் இது தொடர்பில் கலந்துரையாடினார்.



