Advertisement

Main Ad

கல்முனை மாநகர சபையினால் வனவாசகர் வீதி சுமார் 41 லட்சம் ரூபா செலவில் கொங்ரீட் பாதையாக அபிவிருத்தி !

நற்பிட்டிமுனை தமிழ் பிரிவில் வனவாசகர் வீதியை சுமார் 41 லட்சம் ரூபா செலவில் கொங்ரீட் பாதையாக அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டம் நேற்று மாலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
நற்பிட்டிமுனை வனவாசகர் வீதியில் அமைந்துள்ள கோவில் முற்றத்தில் அதன் பிரதம தர்மகத்தா திரு.தர்மகத்தா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை எதிர்க் கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம், மாநகர சபை உறுப்பினர் எம்.ஜெயக்குமார், மாநகர சபையின் சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத் உள்ளிட்ட பிரமுகர்களும் கோவில் தர்மகத்தாக்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இவ்வீதி அபிவிருத்திக்கு கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் நெல்சிப் திட்டத்தின் கீழ் நிதியொதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்காக இந்நிகழ்வின் போது மாநகர முதல்வருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.