இன்றுஅக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் மீன்களை ஏற்றி வந்த சிறியரக
லொறியொன்று அதன் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இலங்கை மின்சார சபைக்கு
சொந்தமான மின்கம்பத்தில் மோதியதால் வாகனத்திற்கு பலத்த சேதம்
ஏற்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் பயணித்த இருவரும் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த
விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.