Advertisement

Main Ad

தொடரும் சீரற்ற வானிலையால் மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்


தொடரும் சீரற்ற வானிலையால் மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்நாட்டின் நிலவும் சீரற்ற வானிலையால் சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவவதாக இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று இரவு 10 தொடக்கம் 24 மணித்தியாலங்களுக்குள் கடும் மழை பெய்யும் பட்சத்தில் கண்டி, மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை பிரதேசம் மற்றும்   பண்டாரவளையில் கற் பாறைகள், மண் மேடுகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பகுதிகளில் மண் சரிவு ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டி, மாத்தளை, மற்றும் பண்டாரவளை ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்துவருகின்றது.
இந்த நிலையில் குறித்த பகுதிகள் தொடர்பில் தேசிய கட்டட ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றை அடிப்படையாக கொண்டே இடர் முகாமைத்துவ நிலையம் மண் சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதேவேளை, நாட்டின் அநேகமான பகுதிகளில் இன்றும் கடும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் எனவும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறுகின்றார்.