Advertisement

Main Ad

கல்முனை பிரதேச செயலக விளையாட்டு விழா


கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம். றஸீனின் வழிநடாத்தலில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இவ்விளையாட்டு நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார் ஹரீஸ் MP அவர்கள்.

இவ்விளையாட்டுப் போட்டியில் கல்முனை பிரதேச முன்னணிக் கழகங்கள் பங்குபற்றிருந்தன.

இவ்வருட அபிவிருத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் சந்தாங்கேணி மைதானத்தின் அபிவிருத்திற்கு முன்னுரிமை அளிக்கவுள்ளதாகவும். அத்துடன் விளையாட்டு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றும் இவ்மைதான அபிவிருத்திக்கான முன்னேற்பாடுகளை செய்ய தருகை தரவுள்ளது. அதன் பிற்பாடு விளையாட்டு அமைச்சின் நேரடி நிதி மூலமும் இம்மைதானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. எனவும் குறிப்பிட்டார்.