சவூதி அரேபியாவில் இறந்த
கல்முனைப் பெண்மணியின் உடல் 10 மாதங்களின் பின்
கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு
கொண்டுவரப்பட்டது. நேற்று முந்தினம் ஞாயிறன்று
பகல் கல்முனை நற்பிட்டிமுனையில் நல்லடக்கம்
செய்யப்பட்டது.
அவர் கடமையாற்றிய சவுதிஅரேபிய
வீட்டு எஜமானின் நிதிச்செலவுடன்; அங்குள்ள பிரேதபெட்டியில் பூரண சுகாதாரமுறையில் இறுக்கி
அடைக்கப்பட்ட நிலையில் கல்முனை வந்துசேர்ந்தது. கல்முனை
நற்பிட்டிமுனையிலுள்ள வீட்டில் ஒருநாள் வைக்கப்பட்டு இந்துமுறைப்படி
சகல கிரியைகளும் நடாத்தப்பட்டபோதிலும் பெட்டி திறக்கப்ப்படவில்லை. சுகாதார
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை
பகல் நற்பிட்டிமுனை இந்து மயானத்திற்கொண்டு செல்லப்பட்டு
அங்கு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் முன்னிலையில் பெட்டி திறக்கப்பட்டு 15 நிமிடங்களின்பின்
உறவினர்களுக்கு காட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இது பற்றி மேலும்
தெரியவருவதாவது..
கல்முனை, நற்பட்டிமுனை கிராமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின்
தாயாரான கணபதிப்பிள்ளை ரமணி என்ற குடும்ப
பெண் குடும்ப கஷ்டம்
காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஐனவரி
மாதம் 25 ஆம்
திகதி சவூதி அரேபியாவுக்கு வீட்டு
வேலைக்காக சென்றுள்ளார்.
கணவர்
காத்தமுத்து வேதானந்தம் பிள்ளைகளான வே.பவித்ரா வயது 26 வே.கேமலதா வயது
23 வே.கோபிகாந்த் வயது
19 வே.மோனிசா வயது
12 ஆகியோரை விட்டு இவர் சவூதி சென்றிருந்தார்.
ரமணி கடந்த 2013 ஆம்
ஆண்டு ஐ_லை மாதம்
14 ஆம் திகதி சுகயீனம்
காரணமாக இறந்துள்ளதாக ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி அவரின்
வீட்டிற்கு தகவல் கிடைத்துள்ளது. அத்தினத்தில்
அவரின் அப்பாவும் இறந்துள்ளார்.
துக்கத்தில் இருக்கும் போது மற்றும் ஒரு
துக்கச் செய்தியும் அவர்களின் வீட்டிற்கு கிடைத்துள்ளது. செய்வது அறியாது கடந்த
வாரம் கதைத்த மனைவி எவ்வாறு
சுகயீனம் காரணமாக இறந்திருப்பார் என
சந்தேகம் கொண்டு மரணத்தில் சந்தேகம்
உள்ளது உடன் சட்ட நடவடிக்கையினை
மேற்கொண்டு உடலை இலங்கைக்கு அனுப்புமாறு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றிற்கு கணவர்
காத்தமுத்து வேதானந்தம் முறைப்பாடு செய்திருந்தார்.
பிரேத பரிசோதனையில்
அவர் இருதய நோய் காரணமாக
இறந்துள்ளதாக கடந்த 2014.ஐனவரி 20 ஆம்
திகதி மருத்துவ அறிக்கையின் பிரதிகளை வெளிநாட்டு அமைச்சு கணவருக்கு அனுப்பியுள்ளார்கள்.
2014.04.17 ஆம் திகதி கணபதிப்பிள்ளை
ரமணியின் பிரேதம் இலங்கைக்கு அனுப்பப்படும்
தகவல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கார்க்கோ
பொதிகள் பிரிவு காரியாலயம்
மூலம் எமக்கு
கிடைக்கப் பெற்றது. இத்தகவலின் உண்மை நிலவரத்தினை அறிந்த
பிறகு இலங்கை வெளிவிவகார அமைச்சின்
ஊடாக நாம் பெற்ற தகவல்
உறுதி செய்யப்பட்டது.
2014.01.19 ஆம் திகதி காலை
10.00 மணியளவில் கொழும்பு கட்டு நாயக்க விமான
நிலையத்தில் இருந்து ரமணியின் பிரேதத்தினை
கணவன் கே.வேதானந்தம் பெற்றுக்
கொண்டார்.
இதன்பலனாக ரமணியின் பிரேதம் 10 மாதங்களின் பின் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு நேற்று முன்தினம் நல்லடக்கம் செய்யபட்டடது.

