Advertisement

Main Ad

மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்த ஆசிரியர் கைது


மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்த ஆசிரியர் கைதுமட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாற்றில் 11 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தனியார் கல்வி நிலைய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கையடக்க தொலைபேசியில் அதனை ஒளிப்பதிவு செய்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியானதை அடுத்து பிரதேச மக்கள் குறித்த ஆசிரியரை பிடித்து இன்று முற்பகல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ஆசிரியரின் கையடக்க தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.