பொதுபலசேனா
அமைப்பின் உருவாக்கம் தொடர்பில் ஞானசார தேரர் கூறிய கருத்துக்களில்
நம்பகத்தன்மை இல்லையென்பதை தொகுப்பாளர் கூறினார். குறிப்பாக 2011 ஆம் ஆண்டு
ஞானசாரர் தலைமையிலான குழுவினர் நோர்வேயின் ஒஸ்லோவுக்கு பயணத்துள்ளனர்.
இலங்கை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க நோர்வே
வந்ததாக கூறிய ஞானசாரர இந்த பயணத்திற்கான முழ செலவும் எம்மாலேயே
மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறிய போது இடை மறித்த தொகுப்பாளர் நோர்வே துாதரகம்
முழு பயணத்திற்கான செலவு விபரங்களை வெளியிட்டுள்ளதே என்று கூறிய போது
சிறுபிள்ளைத்தனமாக பதிலை வழங்கிய ஞானசார தேரர். பாக்குவெட்டியில் அகப்பட்ட
பாக்கை போன்று தாமாகவே வாரிப் போட்டுக் கொண்ட ஞானசார தேரர் இலங்கையில்
தமிழ் மக்களுக்காக பேச நோர்வெயினை ஏன் தெரிவு செய்தீர்கள் என்று
தொகுப்பாளர் மேலும் தொடுத்த கேள்விக்கு அது தமது விருப்பம் என்றார்.
இலங்கைக்குள் நோர்வே மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் நன்கு தான்
அறிவதாகவும் எனது நிகழ்ச்சி நிரல் தொடர்பில் யாருக்கும் சொல்ல வேண்டிய
தேவையில்லை என்றும் கூறினார்.
அதே வேளை இலங்கையில் உள்ள இந்துக்களுக்கு
பாதுகாப்பு வழங்கி கிறிஸ்தவர்களை இல்லாமல் செய்வதே எமது முக்கிய
நோக்கமாகும் அதே போல் முஸ்லிம்களின் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவதும்
அதில் ஒன்று என்று பதிலளித்த ஞானசார தேரரிடம் தொகுப்பாளர் தமிழ் மக்களுக்கு
உதவி செய்ய வடக்குக்கு அல்லவா நீங்கள் செல்ல வேண்டும் எதற்காக நோர்வே
சென்றீர்கள் என்றதும் அரசாங்கம் அம்மக்களுக்கு உதவி செய்வதில்லை என்றும்
சர்வதேசத்திடம் உதவி பெற்று வர சென்றதாக கூறினார்.
இந்த ஞானசார சாரர் அன்று நோர்வேயுடன்
செய்து கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பிலும் பெற்றுக் கொண்டுள்ள நன்மைகள்
தொடர்பிலும் அமைச்சர் டிலான் பெரேரா ஊடகங்கள் மூலம்
தெளிவுபடுத்திவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டை
காட்டிக்கொடுத்து இலங்கை தேசத்தின் கௌவத்தை நாசப்படுத்தும் இவ்வாறான
ஆசாமிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லையோல் இந்த நாட்டின்
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றில் ஆஜர்படுத்தும்
படுமோசமான செயலை ஞானசார தேரர் செய்வார் என்ற எதிர்வு கூறலை அரசு கவனத்தில்
கொள்ள வெண்டும்.
ஜனாதிபதியின் வாசகத்துக்கு அமைய நாட்டில்
இரு பிரிவினரே இருக்கின்றனர். ஒருவர் நாட்டின் விசுவாசி மற்றையர் காட்டிக்
கொடுப்பவர்..(இர்)
