Advertisement

Main Ad

உலகில் வாழ்ந்தவர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சிரேஷ்டமானவர் விளக்குகிறார் வஜிர நாயக்க தேரர்!


இந்த உலகில் வாழ்ந்தவர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சிரேஷ்டமானவர் என சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் கும்புரகமுவ வஜிர நாயக்க தேரர் தெரிவித்தார்.
Kumbura Vajiraஉலகில் தாக்கம் செலுத்தியவர்களில் அவர் மிகவும் முக்கியமானவர் என போராசிரியர் குறிப்பிட்டார். முழு சமூகத்திற்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு அருள் எனும் தலைப்பிலான மாநாடொன்று நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்றது.
சவூதி அரேபியாவை தளமாக கொண்டு செயற்படும் சர்வதேச இஸ்லாமிய அகதிகள் இயக்கத்தின் இலங்கை கிளையினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் கும்புரகமுவ வஜிர நாயக்க தேரர்,
ஆயுத மாற்றம் மற்றும் சிந்தனை மாற்றம் ஆகிய இரண்டு வழிகள் மூலம் உலகில் தாக்கம் செலுத்த முடியும். எனினும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சிந்தனையின் ஊடாக உலகில் பல மாற்றங்களை மேற்கொண்டார்.
மிகவும் பின் தங்கிய காலத்திலேயே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த உலகில் வாழ்ந்தார்கள். எனினும் அவர்கள் நல்லவர்களையும் கெட்டவர்களையும் எவ்வாறு பிறிப்பது என்பது குறித்து முழு உலகிற்கும் தெளிவுபடுத்தினர்.
இதற்கு மேலதிகமாக அக்கால இளைஞர்களை சிறந்தவர்களாகவும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மாற்றினார்கள். சூழல் கரிசனை குறித்து அல்குர்ஆன் மிகத் தெளிவாக கூறியுள்ளது. அடிமைகளின் உரிமை குறித்தும் அல்குர்ஆனில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை  தெளிவாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்கள் மத்தியில் தெளிவாக முன்வைத்தனர். பசிக்கு தான் சாப்பிட வேண்டுமே தவிர, உணவு உள்ளது என்பதற்காக சாப்பிடக் கூடாது எனவும் இஸ்லாம் கூறுகின்றது. கருணை பற்றியும் குர்ஆன் விளக்கமாக கூறுகின்றது.
அதாவது விபச்சார பெண்னொருவர் நாயின் தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தமையினால் அவரின் முழுமையாக மன்னிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாத்தில் கருணை எவ்வளவு முக்கியம் என்பதை அறிய முடிகின்றது” என்றார்.
சவூதி அரேபியாவை தளமாக கொண்டு செயற்படும் சர்வதேச இஸ்லாமிய அகதிகள் இயக்கம் 1970ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் கிளை 1991ஆம் ஆண்டு இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டது. சிவில் யுத்தம், சுனாமி மற்றும் இயற்கனை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன, மத வேறுபாடுகளின்றின் இந்த அமைப்பு உதவி செய்துள்ளது.
இதற்கு மேலதிகமாக வீரவில மற்றும் குண்டசாலை சிறைச்சாலைகளில் தொழுகை அறையினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அத்துடன் பல இலட்சக்காணக்கான மக்களுக்கு கிணறுகள் நிர்மாணித்து கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், ஹுனைஸ் பாருக், முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க,  சவூதி அரேபியாவின் அறிஞர்கள், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் மற்றும்  சர்வதேச இஸ்லாமிய அகதிகள் இயக்கத்தின் இலங்கை கிளையின் பணிப்பாளர் இம்ரான் ஜமால்தீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பேருவளை ஜாமியா நளீமியா கலா பீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, அல்குர்ஆன் தஃவா அமைப்பின் பணிப்பாளர் பேராசிரியர் டொக்டர் முஹமட் முக்தார் அலா நூஹ்,  குலோபல் கொமிசன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் டொக்டர் அப்துர்றஹ்மான் பின் ஹமீட் அதுமாமை, இஸ்லாமிய கற்கை நிறுவன தலைவர்  பேராசிரியர் டொக்டர் அப்துர் றஹ்மான் அல் ஹூஹைப் அல் ஹமடி ஆகியோரும் உரையாற்றினர்.