Advertisement

Main Ad

உடலில் மறைத்து வெளிநாட்டு நாணயங்கள் கடத்தல்; மூன்று பெண்கள் கைது



உடலில் மறைத்து வெளிநாட்டு நாணயங்கள் கடத்தல்; மூன்று பெண்கள் கைதுவெளிநாட்டு நாணயத் தாள்களை சூட்சுமமான முறையில் உடலில் மறைத்து வைத்து கொண்டுவந்த மூன்று பெண்கள் கட்டுநாயக்க  விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
83 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்கள் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
அமெரிக்க டொலர், சவுதி ரியால், பவுன் மற்றும் யூரோ போன்ற வெளிநாட்டு நாணயங்களே சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னையிலிருந்து நேற்றிரவு இலங்கையை வந்தடைந்த நிலையில் இந்த பெண்கள் கைது செய்யப்பட்டதாகவும் லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க விமானநிலைய சுங்கப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.