Advertisement

Main Ad

பொத்துவில் மக்களுக்கான நடமாடும் சேவை

பொத்துவில் ஹிதாயா நகர் -01, 02, ஆர்.எம்.நகர் மக்களுக்கான நடமாடும் சேவை பொத்துவில் ஹிதாயாநகர் வித்தியாலயத்தில்; பிரதேச செயலாளர் எம்.எம்.முசர்ரத் தலைமையில் இடம்பெற்றது. இந்நடமாடும் சேவைக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து கொண்டார்.
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழி நடாத்தப்படும் 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' எனும் தொனிப் பொருளில் நாடு பூராகவும் நடாத்தப்பட்டு வருகின்றது.