Advertisement

Main Ad

கம்பளையில் 2 முஸ்லிம் குழுக்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் - ஒருவருக்கு கத்திக்குத்து

கம்பளை நகரில்  25.04.2014 இரவு இரு முஸ்லிம் இளைஞர் குழுக்களுக்கிடையில்  ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில்  இளைஞனொருவன் முகத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
கம்பளை இலம்காம்வத்தையை சேர்ந்த 17 வயதுடைய எம். அர்சாத் என்ற இளைஞனே இச்சம்பவத்தில்  கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் கம்பளை நகரில் கம்பளைவெல வீதியில் இடம்பெற்றுள்ளது.
இவர் படுகாயம் அடைந்த நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.