
நாளுக்கு நாள் அதிகரித்து பயங்கரவாதத்தின் உச்ச கட்டத்தை அடைந்துள்ள பொது பல சேனா அமைப்பின் நடவடிக்கைகளைக் கண்டிக்க மேலும் ஒரு பெளத்த துறவிகள் சங்கம் உருவாகியுள்ளது.
மூத்த துறவிகளின் முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் குறித்த அமைப்பு இலங்கைத் தீவில் சமயங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வளர்ப்பதோடு சமய விவகாரங்களுக்கான விளக்கங்கள் மற்றும் தேசிய செயற்பாடுகளின் திட்டங்களையும் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் குறித்த அமைப்பின் ஆரம்ப ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொது பல சேனா அமைப்புக்கு பெளத்த மதத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சுமத்தியுள்ளது.
