கல்முனை மாநகர சபை பிரதேசங்களின் வீதி மின் விளக்கு பராமரிப்புக்கென புதிய வாகனம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாகனத்தை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியிடம் கையளித்தார்.
நேற்று புதன்கிழமை மாலை மாநகர சபை வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர், எம்.ஐ.ஏ.மஜீத், பதில் சட்ட அதிகாரி சட்டத்தரணி எம்.எம்.பௌசான், மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், பெ ஸ்டர் ரியாஸ், உமர் அலி, ஏ.எம்.பரக்கத்துல்லா, ஏ.அமிர்தலிங்கம், எம்.ஜெயக்குமார் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இதுவரை காலமும் கல்முனை மாநகர சபை பிரதேசங்களின் வீதி மின் விளக்கு பராமரிப்புக்கென ஒரு வாகனமே இருந்து வந்தது. தற்போது இன்னுமொரு வாகனம் எமக்கு கிடைத்திருப்பதன் மூலம் மின் விளக்கு பராமரிப்புகளை இலகுபடுத்த முடியும். இதற்கு நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் நிஸாம் காரியப்பர் அவர்களுக்கு எமது மாநகர சபை நிர்வாகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.
