Advertisement

Main Ad

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமாக மின்சாரம்

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சட்ட விரோதமாக மின்சாரம் பெற்ற 9 பேரை தலா 50,000 சரீரப் பிணையில் செல்லுமாறு
அக்கரைப்பற்று மாவட்ட நீதவானும், நீதிமன்ற பதில்  நீதவானுமாகிய ஏ.ஜி. அலக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை 4.30 மணி முதல் காலை 8.00 மணிவரை  இலங்கை மின்சாரசபை அதிகாரிகளும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் சார்ஜன் யூ.எம். ஆப்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே பெண்ணொருவர் உட்பட ஒன்பது பேர் கைதுசெய்யபட்டனர்.

இதன்போது, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 5ஆம் கட்டை பகுதியிலிருந்து ஒருவரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அலிக்கம்பை கிராமத்திலிருந்து எட்டுப் பேரும் கைதுசெய்யப்பட்டனர்.