பொதுநலவாய இளைஞர் மாநாட்டுக்கு பொருத்தமாக உருவாக்கப்பட்ட பொதுநலவாய
மாநாட்டின் இளைஞர் பேரவையின் செயலாளர் அலுவலகம் எதிர்வரும் 6ஆம் திகதி
மேன்மைதங்கிய ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஹம்பந்தோட்டை
நகர மேயர் கட்டட தொகுதியில் ஆரம்பிக்கப்படுதவற்காக சகல ஏற்பாடுகளும்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டில் இந்தியாவில் சந்திகார் மாவட்டத்தில் நடைபெற்ற இளம்
தலைவர்களின் மாநாட்டின் போது இவ்வாறனதொரு பேரவையை ஆரம்பிப்பதற்காக
தீர்மானித்துள்ளதுடன் சென்ற ஆண்டில் இந்நாட்டில் நடைபெற்ற 9வது பொதுநலவாய
மாநாட்டின் போது ஆலோசனை முன்வைக்கப்பட்டது. 9 உறுப்பினர்களை கொண்ட இவ்
இளைஞர் நிறைவேற்று குழுவில் 4 பேர் இலங்கையர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுநலவாய மாநாட்டின் இளைஞர் பேரவையில் செயலாளர் அலுவலகத்தை இலங்கையில்
உருவாக்கப்பட்டதன் மூலம் இளைஞர்கள் தொடர்பான நிகழ்ச்சிதிட்டங்களின்
கேந்திரமாக இலங்கை திகழ்கின்றதுடன் அது நம்நாடு பெற்ற பெரியதொரு
கௌரவமென்றும் இலங்கையின் இளம் சமுதாயம் சர்வதேச இளம் சமுதாயத்துடன்
கைகோர்ப்பதற்கு கிடைக்கும் மிகப் பெரியதொரு மகத்துவமிக்க சந்தர்ப்பம்
என்றும் இம்மாநாட்டை குறித்து தனது ஆலோசனைகளை வெளியிட்டுள்ள பொதுநலவாய
இளைஞர் பேரவையின் தலைவர் குசல குமார பிரனாந்து தெரிவித்தார்.
இவ் இளைஞர் பேரவையினை திறந்து வைக்கும் சந்தர்ப்பத்தில் பிரதான அதிதிகளாக
இளைஞர் சேவைகள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும,
கல்வி சேவைகள் அமைச்சர், மற்றும் இளைஞர் விவகார மற்றும் திறன்கள்
அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் மொஹான்லால்
கிரேரு, அமைச்சின் செயலாளர் பி.விஐயரத்ன, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்
தலைவர் சட்டதரணி லலித் பியும் பெரேரா பொதுநலவாய மாநாட்டின் இளைஞர் சேவைகள்
பிரிவின் பணிப்பாளர் கெத்தரின் எலிஸ் மற்றும் நிறுவன நிகழ்ச்சி முகாமையாளர்
லேன் ரொபின்சன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

