Advertisement

Main Ad

இருபதுக்கு-20 தலைவராக மாலிங்க : சந்திமால் புறக்கணிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டித் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்பட்ட அதேநேரம் இருபதுக்கு -20 போட்டிகளுக்கான புதிய அணித் தலைவராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதேவேளை இரண்டு வகையான போட்டிகளுக்கும் பிரதி அணித் தலைவராக லஹிரு திரிமன்னே நியமிக்கபட்டுள்ளதாக கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.
 
இருபதுக்கு -20 அணியின் தலைவராக சந்திமால் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லசித் மாலிங்கவிற்கு தலைமை பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.