Advertisement

Main Ad

இறக்காமத்தில் 'முற்றத்து மொட்டுகள் - 2014' வரலாற்று விழா



இறக்காமத்தில் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த (சாதாரணம்), க.பொ.த (உயர்தரம்) போன்ற பரீட்சைகளின் சாதனை புரிந்தோருக்கும், பட்டதாரிகளுக்குமான பாராட்டு விழாவும், சான்றிதழ் வழங்கும் வைபவமும் 'முற்றத்து மொட்டுகள்' 2014 என்ற மகுடத்தின் கீழ் இறக்காமம் பிரதேச சபையின் ஏற்பாட்டில் நேற்று மாலை மிக விமர்சையாக நடைபெற்றது.

இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் மௌலவி யூ.கே. ஜபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதில் HMM.ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல், ஏ.எல்.எம். நஸீர், ஏ.எல். தவம், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அன்ஸில், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் வாஸித், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர், ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் பெண்கள் அதிகமானோர் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டதைக் காணக்கூடியதாக இருந்ததுடன் விழா ஏற்பாடுகள் மிக சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது
HMM.ஹரீஸ் அவர்கள்  பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இறக்காம பாடசாலைகளுக்கான உபகரணங்களை கையளித்தார்கள்.