Advertisement

Main Ad

மலேசியா விமானம் MH 370 பாகங்கள் கண்டுபிடிப்பு - பயணிகளின் கதி என்ன? தீவிர தேடுதல்..!

மலேசியா விமானம் MH 370 பாகங்கள் இந்திய கடலில் மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த 13 நாட்களாக காணாமல் போயுள்ள மலேசிய விமானத்தின் பாகங்கள் இந்தியக் கடல் பகுதியில் மிதப்பதாக திடுக்கிடும் தகவல்களை, தெலுங்கு மொழி, 'டிவி' சேனல், நேற்று வெளியிட்டது.

ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தை ஒட்டிய, வங்கக் கடல் பகுதியில், மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் சென்ற போது, விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பதை கண்டு உள்ளனர்.இதுகுறித்து, அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தரப்பட்டது.

malasia-vimanathin-pagangal-kidaithathu
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக, கடலுக்குள் சென்று, விமானத்தின் பாகங்களை கைப்பற்றி, அது, காணாமல் போன விமானத்தின் பாகங்கள்தானா என விசாரித்து வருகின்றனர்.


இச்செய்தியைக் கேட்ட விமானப் பயணிகளின் உறவினர்கள் கதிகலங்கி போயிருக்கின்றனர். செய்தியில் கூறப்பட்ட தகவல்கள் அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்த படாததால் அவர்களின் சோகம் இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது.

மற்றுமொரு நம்பகமான தகவல்: 

இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் போன்ற பொருட்கள் மிதப்பதை, செயற்கைகோள்கள் கண்டறிந்துள்ளன. இதையடுத்து, அந்த பொருட்கள் குறித்து ஆய்வு நடத்த, ஆஸ்திரேலியாக ஒரு விமானத்தை அனுப்பி உள்ளது. அதன் விபரம் பின்னர் தெரிய வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிரேன்ஜ் கருத்து:

அவ்வப்பொழுது இதுபோன்று கிடைக்கும் பல்வேறு யூகங்களால் கிடைக்கப்பெறும் தகவல்களால் விமானத்தில் பயணம் செய்த உறவிறனர்கள் கலங்கிப் போயுள்ளனர். நல்ல தகவல் வந்து சேராதா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

இதற்கிடையில் காணாமல் போன விமானம் பற்றிய முழுமையான தகவல்களை மலேசிய அரசு வெளியிட வேண்டும் என விமானத்தில் பயணம் செய்த உறவினர்கள் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளனர்.
kanamal pona malaysia vimanam patriya thagavalgal
உறவுகளை இழந்து, அதுபற்றிய தகவல்களையும் சரியாக பெற முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் அவர்களுக்கு CINERANGE சார்பாக ஆறுதல் சொல்வோம். காணாமல் போன விமானம், பயணிகள் நல்ல முறையில் திரும்ப இறைவனை பிரார்த்திப்போம்..!

நம்பிக்கை ஒன்றே நலமுடன் வாழ வழி..! நலமுடன் அனைவரும் திரும்புவார்கள் என நம்புவோம்.