
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணராக கடமையேற்றுள்ள டாக்டர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும் வைத்தியசாலைக்கு பயன்பெற வருவோரில் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் மிகவும் குறைந்தளவிலேயே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை காலமும் கொழும்பில் உள்ள பிரபல வைத்தியசாலைகளுக்கு சென்றே இந்த சிகிச்சைகளை மக்கள் பெற்றுவந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இது கிடைத்துள்ளமையானது வரப்பிரசாதம் எனவும் அவர் தெரிவித்தார்.
உடம்பில் குறைபாடுகள் உள்ளோர்,எரிகாயங்களுக்கு உள்ளானோர்,கால்,கைகளில் வளைவுகள் உள்ளோர்,விகாரமான உருவங்கள் போன்றவற்றினை பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மூலம் மாற்றிக்கொள்ளமுடியும்.
வெளியில் இவற்றினை செய்வது என்றால் பெருமளவு பணத்தினை வழங்கவேண்டியுள்ளது.ஆனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இவற்றினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
