
சொறிக்கல்முனை ஹொலிக்குரோஸ் மகா வித்தியாலயத்தில் இருந்து விளையாட்டு
நிகழ்ச்சிக்காக சாளம்பைக்கேணி அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாயலத்திற்கு இன்று
(17) காலை நான்கு பாடசாலை மாணவிகளை ஏற்றி வந்த முட்சக்கர வண்டி
நாவிதன்வெளிப்பிரதேச சபை வீதியில் ஆலயடிச் சந்திக்கு அருகாமையில் பாதையை
விட்டு விலகி ஆற்றில் விழுந்துள்ளது.
இவ்விபத்தில் காணமடைந்த நான்கு மாணவர்கள் படுகாயமடைந்து சம்மாந்துறை
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இரு மாணவர்களுக்கு பலமான
அடிகாயங்கள் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
ஏனை இருமாணவர்களும் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளனர்.
