Advertisement

Main Ad

சாய்ந்தமருது இளைஞர் வள நிலைய அபிவிருத்தி தொடர்பில் ஹரீஸ் எம்.பி. ஆராய்வு!

1
(ஹாசிப் யாஸீன்)
சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தின் அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் கற்கை நெறிகள் சம்பந்தமாக ஆராயும் கூட்டம் சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (16) நடைபெற்றது.
சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.எம். அலி ஜின்னா மற்றும் வள நிலைய விரிவுரையாளர்கள், இளைஞர், யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தற்போதைய தொழில்நுட்ப சந்தைக்கேற்ற மாதிரியான கற்கை நெறிகளை வள நிலையத்தில் அறிமுகம் செய்தல், மாணவர்களின் நலன்கள் மற்றும் வள நிலையத்தின் அபிவிருத்தி பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
இதற்கான தீர்வினை இளைஞர் விவகார, திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுடன் பேசி உடன் பெற்றுத்தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது உறுதியளித்தார்.
2

Post a Comment

0 Comments