Advertisement

Main Ad

இலங்கை கிரிக்கட் அணியில் இடம் பிடிக்க முஸ்லிம்கள் பெயர்களை மதங்களை மாற்ற வேண்டி இருக்கின்றது

Anura-Kumara.1
20 க்கு 20 உலகக் கிண்ணப் கிரிக்கட் போட்டிகள் தற்போது வங்காளதேசத்தில் இன்று 16-03-2014 துவங்கி இருக்கின்றது. இந்த நிலையில் கிரிக்கட்டுக்காக மதம் மாறுகின்ற அல்லது மாற்றப்படுகின்ற விவகாரம் ஒன்றை அம்பலப்படுத்தி இருக்கின்றார் ஜே.வி.பி.யின் புதிய தலைவர் அனுரகுமார திசாநாயக்க.
களுத்துறை மாவட்டத்தில் அலுத்கம – தர்கா நகரில் ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அணுரகுமார திசாநாயக்க உரையாற்றி இருந்தார். வரலாற்றில் என்றுமில்லாதவாறு பெரும் எண்ணிக்கையிலான பிரதேசத்து முஸ்லிம்கள் இந்தக் கூட்டத்திற்குப் பார்வையாளர்களாக  வந்திருந்தனர். கிட்டத்தட்ட இரு மணித்தியாலங்கள் அவர் அங்கு உரை நிகழ்த்தினார். அவரது உரைக்கு முஸ்லிம்கள் பலத்த கரகோசம் செய்து  அங்கிகாரம் வழகினார்கள். பல உண்மைகளை அவர் அங்கு யதார்த்தமாகச் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் அணியுடன் இலங்கை அணி மோதுகின்ற கிரிக்கட் போட்டிகளின் போது முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக காரகோசம் பண்ணுகின்றார்கள், பட்டாசு கொழுத்துகின்றார்கள் என்று குற்றம் சாட்டப்படுகின்றது. எங்களைப் பொறுத்தவரை அதனை நாம் பெரிது படுத்தவில்லை. அதற்கு சில நியாயங்கள் இருக்கின்றது. நான்  ஒரு உதாரணத்தை இங்கு சொல்லுகின்றோன்.
இலங்கை கிரிக்கட் அணியில் முஸ்லிம்கள் இடம் பிடிக்க அல்லது நிரந்தரமாக நிலைத்திருக்க தங்களது பெயர்களை-மதங்களை மாற்ற வேண்டி இருக்கின்றது. அதற்கான அழுத்தங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுக்கப்படுகின்றது. என்று அதிர்ச்சியான குற்றச்சாட்டை அவர் அங்கு முன்வைத்தார். டில்சான் திலக்கரத்ன இலங்கை கிரிக்கட் அணியின் முன்னணி ஆட்டக்காரர்.  அவர் கிரிக்கட் அணியில் தன்னை தொடந்தும் பாதுகாத்துக் கொள்ள தனது இயற் பெயரான துவான் முஹம்மட் டில்சான் என்பதனைத் திலகரத்ன முதியான்சலாகே டில்சான் என்று மாற்றி இருக்கின்றார்.
இது போன்று இனவாத நடவடிக்கைகளை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்த விடயங்ளை அவர்கலோ அவர்களது பெற்றோர்கலோ ஒருபோதும் பகிரங்கமாப் பேச மாட்டார்கள் பேசவும் முடியாது, என்ற நிலை இங்கு இருக்கின்றது. என்று அவர் தனது உரையில் குற்றம் சாட்டினார். இது பற்றிய கதைகள் முஸ்லிம்களில் சிலர் அறிந்திருந்தாலும் அது பற்றி அவர்கள் ஒரு போது பேசியதில்லை. ஆனால் இது போன்ற விடயங்களை ஜே.வி.பி.யினர் மட்டுமே எப்போதும் துணிந்து பேசுகின்றார்கள். ஆதாரமில்லாமல் அணுரகுமார திசாநாயக்க போன்றவர்கள் இப்படிப் பகிரங்கமாக  பேசவும் மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தது.
அப்படி தனது பெயரை மாற்றியவர்களும் இதனை ஒரு போதும் பகிரங்கமாக  கூறமாட்டார்கள்-கூறவும்; முடியாது. இவர்களும் இவர்களது பெற்றோர்களும் உண்மையை அறிந்து வைத்து இருக்கினார்கள். என்பதுதான் யதார்த்தம்.

Post a Comment

0 Comments