Advertisement

Main Ad

யாழில் பாலியல் காட்சிகள் கொண்ட சீ.டிகளை சிறுவர்களுக்கு விற்றவர்கள் மடக்கிப் பிடிப்பு.

யாழ். நகரப் பகுதியில் 18 வயதுக்குக் குறைந்த மாணவர்களுக்கு ஆபாச 'சீடி' விற்பனை
செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவரை யாழ். பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். யாழ். நகரில் பிரபல தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இயங்கிவரும் 'சீடி' கடை நடத்துநரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில் குறித்த இடங்களுக்குச் சென்ற பொலிஸாரின் விசேடப் பிரிவினர் இவர்களைக் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments