Advertisement

Main Ad

யாழில் அரியவகை நாகபாம்பொன்று கண்டுபிடிப்பு


யாழில் அரியவகை நாகபாம்பொன்று கண்டுபிடிப்புயாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு ராணி வீதியிலுள்ள வீடொன்றில் சுமார் 5 அடி நீளமான அரியவகை நாகபாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புறாக்கூட்டுக்குள் நுழைந்த பாம்பு,  வீட்டு உரிமையாளரால் பிடிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பிடிக்கப்பட்டுள்ள அரியவகை நாகத்தினை கிளிநொச்சி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


naga02
யாழில் நிலவும் வரட்சி காரணமாக சனநெரிசலான பகுதிக்கு பாம்பு வந்திருக்க கூடும் என நம்பப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.