Advertisement

Main Ad

271 பயணிகளின் பயணித்த மலேசியன் ஏயார் லைன்ஸ் விமானம் ஹொங்கொங்கில் அவசர தரையிறக்கம்

 


271 பயணிகளின் பயணித்த மலேசியன் ஏயார் லைன்ஸ் விமானம் ஹொங்கொங்கில் அவசர தரையிறக்கம்கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஹொங்காங்கில் தரையிறக்கப்பட்டது.
ஏயார் பஸ் A330-300 விமானம் தமது நாட்டு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது தீயணைப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக ஹொங்கொங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமது நிறுவனத்திற்கு சொந்தமான MH066 விமானம் பிரதான மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக ஹொங்காங்கில் தரையிறக்கப்பட்டுள்ளதாக மலேசியன் ஏயார் லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்பட்டுள்ளது.
இந்த விமானம் 271 பயணிகளுடன் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது