
(
வீ.ரீ.சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய மகா கும்பாபிசேகம் எதிர்வரும் புதன் கிழமை ( 26 )
ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான
எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம்
திங்கட்கிழமையும் (24)
செவ்வாய்க்கிழமையும் ( 25) நடைபெறவுள்ளது.கும்பாபிசேகத்திற்கான கிரியைகள் யாவும் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கர்மாரம்பத்தோடு ஆரம்பித்தன.
கும்பாபிசேக பிரதம குரு வேதாகம வித்யாபதி சிவஸ்ரீ குமார விக்னேஸ்வரக் குருக்கள் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கிரியைகளை ஆரம்பித்துவைத்து ஆசியுரைவழங்குகையில்
ஒருவன் 12வருடங்கள் ஆலயத்திற்கு சென்று வழிபட்டதற்கான புண்ணியம் கும்பாபிசேகம் நடைபெறும் ஒரே தினத்தில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்தளவு சக்திவாய்ந்தது கும்பாபிசேகம்.எனவே பக்தர்கள் எவ்வகையிலேனும் கும்பாபிசேகத்தைக் காணவரவேண்டும். என்றார்.
கும்பாபிசேகத்தையொட்டி ஆலயம் புதுப்பொலிவோடு ஜெகஜோதியாகக் காட்சியளிக்கிறது.ஊர்பூராக பக்திப்பரவசம் நிலவுகிறது.
புனராவர்த்தன மகா கும்பாபிசேகம் 26.03.2014 (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு கும்பாபிசேக பிரதம குரு வேதாகம வித்யாபதி சிவஸ்ரீ குமார விக்னேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. ஆலய பிரதம குரு சிவாச்சார்யதிலகம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் இப்பெருவிழாவிற்கான கிரியை ஏற்பாடுகளை செய்துவருகிறார்.
சர்வபோதகராக நவாலியூர் சிவஸ்ரீ சாமி விஸ்வநாத மணிக்குருக்கள் வேத பாராயணம் ஓதுநராக இந்தியா சிவஸ்ரீ பிரபாகரக்குருக்கள் சாதகாச்சார்யர்களாக யாழ்ப்பாணம் பிரம்மஸ்ரீ ப.சனாதனசர்மா இந்தியா சிவஸ்ரீ விஜய பிரதீபக்குருக்கள் கண்டி பிரம்மஸ்ரீ பத்மநாப ராகவசர்மா ஆகியோர் செயற்படவுள்ளனர்.
ஆலயத்தில் புதிதாக அழகாக அமைக்கப்பட்ட பரிவாரமூர்த்திகளுக்கும் பஞ்சதள இராஜ கோபுரத்திற்கும் கும்பாபிசேகம் இடம்பெறும்.
கும்பாபிசேகத்தைத் தொடர்ந்து அன்னதானமும் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிசேகப்பூஜைகள் நடைபெறும்.