Advertisement

Main Ad

ஹக்கீம் ஏமாற்றி விட்டார்; மு.கா.வில் தொடர்ந்தும் இருப்பதில் அர்த்தமில்லை என்பதால் அதாஉல்லாவுடன் இணைகிறேன்!


hqdefault


உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இன்று திங்கட்கிழமை (24) உத்தியோகபூர்வமாக இணையவுள்ளதாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
“மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் எனக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமையால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேற உத்தேசித்துள்ளேன். எனது மக்களின் நலன் கருதியே இந்த முடிவினை நான் எடுத்துள்ளேன்.
மேயராக இருந்த என்னை பிரதி மேயராக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்தது. ஆனாலும், இந்த பிரதி மேயர் பதவியானது தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்து வர்த்தமானியில் வெளியிடப்படாத அதிகாரபூர்வமற்ற பதவியாகவே இருந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் மு.கா தலைமையினால் எனக்கு வழங்கப்பட்ட எந்தவித வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆகையினால், அக்கட்சியில் தொடர்ந்து இருப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிராஸ் மீராசாஹிப், அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணையும் நிகழ்வு இன்று மாலை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.