Advertisement

Main Ad

இந்தியப் பெருங்கடலின் தெற்கே மிதப்பவை காணாமல்போன விமானத்தின் எச்சங்களா?

இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் சில பொருட்கள் மிதப்பதாக சீன செயற்கைகோள் படங்கள் காட்டியிருந்தன.

இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் சில பொருட்கள் மிதப்பதாக சீன செயற்கைகோள் படங்கள் காட்டியிருந்தன.
காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH-370ஐத் தேடும் பணி இன்னும் ஓயவில்லை, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் தொலைதூரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு விமானங்கள் விமான எச்சங்களைத் தேடிவருகின்றனர்.
இந்த விமாத்தின் பாகம் எதுவும் மிதப்பதைக் கண்டதாக இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. ஆனால் தற்போது தேடப்படும் பகுதியில் சில பொருட்கள் மிதப்பதை பிரஞ்சு செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் காட்டுவதாக மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விமானத்திலிருந்து வந்திருக்க சாத்தியமுள்ள சில பொருட்கள் கடலில் மிதப்பதை சீன மற்றும் ஆஸ்திரேலிய செயற்கைக்கோள்கள் எடுத்த படங்கள் காட்டுவதாக ஏற்கனவே தெரியவந்திருந்தது.
தற்போதைய தேடுதல் பணிகளில் உதவுவதற்காக சீன விமானங்கள் இரண்டு மேற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து அனுப்பப்படவுள்ளதாக மலேசியா கூறுகிறது.
தேடல் நடக்கும் இடத்துக்கு ஆஸ்திரேலியா அனுப்பியுள்ள போர்க்கப்பலில் ஆளில்லாமல் இயக்கப்படக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் உள்ளது.