
சாய்ந்தமருது
அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் தரம் 2இல் கல்வி பயிலும் மாணவன்
ஒருவன் நேற்று பாடசாலை முன் கேற்றடியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்
ஒன்றில் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் அஸ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்குட்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றான்.
இச்சிறுவனின் முகத்தில் மோட்டார் சைக்கிளின் சைலன்சர் பட்டதால் முகத்தில்
இருந்த தோல் சுட்டநிலையில் காணப்பட்டது.
பிரதான
வீதிகளில் செல்வதுபோன்று மோட்டார் சைக்கிலிலும் முச்சக்கர வண்டிகளிலும்
உள்ளுர்களில் வேகமாகச் செல்லும் நபர்கள் மீது பொலிசார் கடும் நடவடிக்கை
எடுக்கவேண்டும். என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
