கரையோரப் பிரதேசங்களில் தற்போது அதிகளவான மீன்கள் பிடிபடும் காலப்பகுதியில் இன்று காலையில் நிந்தவூர் கடலில் கொப்புறு மீன் இனத்தினைச்சேர்ந்த மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.
04 அடி நீளமானதும் 140 கிலோ கிறாம் நிறையுடயதுமான இந்த மீன் இரண்டு வகைகளைக் கொண்டுள்ளதாகவும் அதில் வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களிலே இது காணப்படுவதாகவும் மீனவர் ஏ. சாஜஹான் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதேவேளை இந்த அரியவகை மீனினம் படகுகள் மூலமாக ஆழ்கடலுக்குச் சென்றே பிடிக்க முடியும் என்றும் அதிஷ்டவசமாக இந்த மீன் கரைவலையில் பிடிபட்டதாகவும் இதில் ஒரு மீன் வலையினைப் பிய்த்துக் கொண்டு தப்பிச்சென்றதாகவும் அந்த மீனவர் மேலும் தெரிவித்தார்.