ஜப்பானில் இன்று இரண்டு சரக்கு கப்பல்கள் இன்று மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் 9 சீனக்குழு உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளனர். இது குறித்து ஜப்பானிய கடற்படையினர் தெரிவித்துள்ளதாவது;
12,630 தொன் எடையுடன் எஃக்கு சுருள் ஏற்றிக் கொண்டு பனாமா கொடி ஏந்தி வந்த சரக்குக் கப்பலும் கொரிய நாட்டுக் கப்பலும் மோதி கடலில் மூழ்கியன.
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் சீனக் குழு உறுப்பினர்கள் 9 பேர் காணாமல் போயுள்ளனர். இதனை அடுத்து ரோந்துக் கப்பல் மற்றும் ஹெலிகொப்டர்களில் தேடுதல் பணி நடந்து வருகிறது.
20 சீன குழு உறுப்பினர்கள் சென்ற இந்த கப்பலில் 11பேர் மீட்டப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.