சீனாவில் ஸெஜியாங் மாகாணத்தில் வீதியில்
சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கையில் போக்குவரத்து விதிகளை மீறி
முச்சக்கர வண்டியொன்றை செலுத்தி சென்ற ஜோடியொன்று வேகமாக வந்த காரில் மோதி
தூக்கி வீசப்படும் அதிர்ச்சியூட்டும் காட்சி அந்த வீதியிலிருந்த
சி.சி.ரி.வி கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது.
கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி லின்ஹாய் நகரில் இடம்பெற்ற இந்த கொடூர
விபத்தின் போது பதிவாகிய மேற்படி சி.சி.ரி.வி வீடியோ காட்சிகள் வீதி
விபத்துகள் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக இந்த
வாரம் அந்நாட்டு அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.