Advertisement

Main Ad

சிறுவன் மீது மோசமான வகையில் பாலியல் குற்றம் புரிந்த 55 வயதுடைய நபருக்கு விளக்கமறியல்

கண்டி போகம்பறை விளையாட்டு மைதான மலசல கூடத்திற்குள் வைத்து பாடசாலை சிறுவன் ஒருவன் மீது மோசமான வகையில் பாலியல் குற்றம் புரிந்த 55 வயதுடைய நபர் ஒருவரை கண்டி நீதிமன்ற நீதிவான் வசந்த குமார எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 
 
கண்டி நகரப் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் நான்காம் வகுப்பில் கல்வி பயிலும் சிறுவன் ஒருவனே இவ்வாறு பாலியல் இம்சைக்குள்ளாகியுள்ளான். 
 
மேற்படி பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கண்டி போகம்பறை மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த போது மாலை வேளை போட்டிகளை பார்த்துக் கொண்டிருந்த நபர் சிறுவன் மலசலகூடத்திற்கு செல்வதை அவதானித்து மெதுவாக உட்புகுந்து சிறுவன் மீது பாலியல் குற்றம் புரிந்துள்ளார். 
 
இதனை அறிந்த பொலிஸார் அந்நபரை வளைத்துப் பிடித்து நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதிவான் சந்தேக நபருக்கு மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments