ஆனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளாரென்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா
தெற்காசிய கொள்கைகள் மற்றும் ஆய்வு கற்கை நிலையத்தின் தலைவியென்ற ரீதியில்
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இலங்கையில் மத
நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான
நடவடிக்கைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் இது தொடர்பாக தான்
ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இக் கடிதம் தொடர்பிலான விபரங்கள் எதுவும் தெரியாதெனவும், இதுவரையில்
ஜனாதிபதியை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி எவ்விதமான வேண்டுகோளையும்
விடுக்கவில்லையென்றும் ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க
தெரிவித்தார்.
0 Comments