Advertisement

Main Ad

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மேலுமொரு மண்டையோடு மீட்பு



மன்னார் மனித புதைகுழியிலிருந்து மேலுமொரு மண்டையோடு மீட்புமன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழியில் இருந்து மேலுமொரு மண்டையோடு கண்டெடுடக்கப்பட்டுள்ளது.
இந்த மனித புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்டுள்ள மனித மண்டையோடுகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
புதைகுழியில் அளவீடு செய்யப்பட்ட மேலும் 4 எலும்புக்கூடுகள் இன்று முழுமையாக மீட்கப்பட்டு பெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் புதைகுழியில் இருந்து இதுவரை மொத்தம் 40 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு பெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் வைத்தியசாலையின் பிரத்தியேக அறையொன்றில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட நாளில் இருந்து 23 ஆவது நாளாக இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

Post a Comment

0 Comments